அன்புள்ள அஜித்....
தனி மனிதனாய் நீ சந்தித்த
பிரச்சனைகளான நட்பின் துரோகம்,கார்விபத்தில்
எமனுக்கு டாட்டா காட்டியது,பல
தடைகளை வெல்லும் உன் தன்னம்பிக்கை, எதிலும் உன் நேர்மை, உண்மை,நீ
கண்ணை அசைத்தால் எதையும் செய்யவும்
எவனையும் செய்யவும் தயாராக இருக்கும்
லட்சகணக்கான இளைஞர்
கூட்டத்தை வைத்து கொண்டு “என்
ரசிகர்களை என் சுயநலத்திற்காக
பயன்படுத்த மாட்டேன், நான் அதிகம்
படிக்கவில்லை என் ரசிகர்கள் அதிகம்
படிக்கவேண்டும், என் படம்
நல்லா இருந்தால் தியீட்டர் ல
வந்து பாருங்க அது போதும் ”
என்று சொல்லி மன்றங்களை கலைத்தாய்.
இதையெல்லாம் உன்னை எதிர்த்தவர்களும்
உன்னை சீண்டி பார்க்க நினைத்தவர்களும்
ஐந்து நிமிடம் சிந்தித்தால்
ஆறாவது நிமிடம் உன் காலில்
விழுந்து மன்னிப்பு கேட்க்க
நினைப்பார்கள் … (அவர்கள் மனிதனாக
இருந்தால் ) ரசிகர்கள் வாழ்க்கை மீது உள்ள
அக்கறையால் நீ மன்றங்களை கலைக்கலாம்
ஆனால் எங்கள் உயிரோடு கலந்த
உன்னை எவனாலும் கலைக்க முடியாது அந்த
எமனாழும் கலைக்க முடியாது, காரணம்
இது உண்மைக்கு சேர்ந்த உண்மையான
கூட்டம்.
வெற்றியோ தோல்வியோ உன்னோடுதான், இறந்தாலும் உன் ரசிகனாக.
இப்படிக்குஅஜித்
என்ற நடிகனை விட அஜித் என்ற
மனிதனை உயிராக நேசிக்கும் அஜித்தின்
தீவிர ரசிகன்.
